கைக்குள் கையாய்கைத்தொலைபேசிஇரா.விஜயகௌரிகைக்குள் கையாய்கைத்தொலைபேசி………. கைக்குள் கையாய் -நமை கையகப்படுத்தும் வலையகப்பின்னல் வையகம் தொட்டெழும் பிரியாத் தோழி-அவள் பிணைத்தெழும் ஆழி வினாடியுள் நுழைந்து -நமை விரயமும் செய்திடும் அரக்கி நல்லவை தொடுவாள்-நமை நாணிடவும் வைப்பாள் தனை தொட்டவர் தம்மை அவர் பயன் தனில் நிறைப்பாள் இவள் இல்லா நொடிகள் இழந்தவை போல் தொடும் காலச்சுழலில் கலந்து எழுந்து உழைப்பவர் தமக்கு உயிரும் தருவாள் பயன் கொள வைத்தால் ஊனாய் நிறைவாள் உழன்று கிடந்தால்-நமை உளைச்சலில். நிறைப்பாள்