இப்போதெல்லாம்ரஜனி அன்ரன்இப்போதெல்லாம்......கவி...ரஜனி அன்ரன் (B.A) 29.02.2024 அப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வு இப்போதெல்லாம் உலகை உலுக்கும் கொடிய நோய்கள் அச்சொட்டாய் வீட்டிற்கு ஒருவரென விடாமல் துரத்துகிறது சக்கரை வியாதி இன்று யாரைக் கேட்டாலும் இரத்த அழுத்தம் சக்கரை வியாதியாம் மருத்துவரும் கொடுக்கிறார் தாராளமாய் மருந்து மாத்திரைகளை அள்ளி ! மூன்றுவேளை உணவோடு முழுங்குகின்றார் மாத்திரைகளையும் மாத்திரைகளின்றி வாழ்வு இல்லை மருத்துவ உலகும் வியாபார நோக்கில் இப்போ மக்களும் மனஅழுத்தத்தோடு நித்தமும் போராட்டம் கனதியான மனதோடும் திண்டாட்டம் ! இப்போதெல்லாம் மக்கள் மருந்தே உணவாக உணவே மருந்தாக விருந்தையும் மருந்தாக்கி அருந்துகின்றார் விருப்பின்றி தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புக்களும் முன்னேற்றம் கண்ட போதும் மருத்துவ உலகின் மகத்தான சேவை மக்கள் மனதிலோ கசப்பான சோபை ! https://www.youtube.com/watch?v=SOmY08KLh64