உனக்குள் ஒரு புது விடியல்நகுலா சிவநாதன்உனக்குள் ஒரு புது விடியல் உன்றன் விடியல் உள்ளத்தில் உணர்வாய் என்றும் துடிக்கட்டும்! இன்பம் எழுதும் எழுதுகோலாய் இறைவன் பாதம் தொடரட்டும் வென்றே ஒளிரும் அறிவொளியாய்! வெற்றி வாழ்வில் ஒளிரட்டும்! நன்றே படைக்கும் இன்றமிழால் நாளும் புதுமை பூக்கட்டும்! உலகம் போற்றும் புதுவிடியல் உனக்குள் பரவ முனைந்திடுவாய்! நலமே போற்றும் நற்றிறனும் நனவாய் ஆக உழைத்திடுவாய்! திலகம் போலே மதிப்புடனே திகழ என்றும் செயற்படுவாய்! குலமே போற்றும் நல்வாழ்வு குவியப் பாடு படுவாயே! நகுலா சிவநாதன் 1762