ஏனிந்தப் பிடிப்புராணி சம்பந்தர்30.05.24 ஆக்கம் 318 ஏனிந்தப் பிடிப்பு ஒவ்வொருவரிலும் வெவ்வேறு பிடிப்பு ஆளைப் பார்க்காமலே குரலில் ஓர் பிடிப்பு கோழையானாலும் ஏழையானதால் துடிப்பு அழகில்லை உள்ளமோ வெள்ளை பழகியதில் மனதில் பிடிப்பு கறுப்புத் தான் மனமோ நல்ல குணம் அதனால் இந்தத் துடிப்பு அதிகம் கதைக்காத பொறுமை எதிலும் மன்னிக்கும் மாபெரும் மேதை இதனாலே அந்தப் பிடிப்பு ஆறுதல் பேச்சு அன்பில் துடிப்பு கூறிய அத்தனையும் யாருக்குத் தான் பிடிக்காது போகும் நடிக்காது நடந்து கொண்டால் எல்லோருக்கும் பிடிக்கத் தூண்டுமே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து