கஞ்சா போதை……….கஞ்சா போதை……….அஞ்சா நெஞ்சம் கொண்டலையும் கஞ்சா போதையின் உள் நுழைவில் விஞ்சிம் உந்தன் மேன்மைகளை கொஞ்சமும் எண்ணா கஞ்சன் நீ பஞ்சமும் பசியும் தலை விரிக்க கொஞ்சும் மழலையும் பரிதவிக்க கஞ்சா உந்தனின் தேடலிலே -நீ தஞ்சமாய் தளர்ந்து நிலை குலைந்தாய் அஞ்சுகம் அவளது அன்புனக்கு கொஞ்சமும் நினைவில் எழவில்லை -உன் கஞ்சா போதையின் ஏக்கம் மட்டும் நிலைதடுமாறி கழிவரக்கம் தொலைத்த மகனாய் நீ எஞ்சிய நாட்கள் கேள்வியிட ஏதிலியாய் நீ பரிதவிக்க -தினம் நாணிடும் பொழுதுகள் புள்ளியிட கஞ்சா உனது காதலியோ அழிவினை நீயே எழுதுகிறாய் ஆக்கத்தின் நொடிகளை குழிபுதைத்தாய் நாணிடும் செயல்களை உனதாக்கி ஓடுவதெல்லாம் கஞ்சா போதைதனைத் தேடி