சொந்தங்களின் தவிப்புரஜனி அன்ரன்“ சொந்தங்களின் தவிப்பு “ ....கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.08.2024 கண்களும் தான் தேட கண்ணீரும் வழிந்தோட காலங்களும் உருண்டோட காணாமற் போனோர் கதை கானல்நீராகி கனவாகத் தான் போச்சு தொலைந்து போன சொந்தங்கள் சொந்தங்களின் தவிப்புக்கள் சொல்லி மாள முடியவில்லை ! உறவுகளைத் தொலைத்த சொந்தங்களின் தேடல் உணர்வோடு தொடர்கிறதே இன்னமும் கேள்விகள் பலவாக மனதில் எழவும் பதிலே இல்லாமல் காலங்கள் கழியவும் நினைவுகள் மாறாமல் தேடல்களும் தொடர்கிறதே ஆண்டுகள் பதினைந்தாக தவிப்போடு ! கடந்தகாலம் கடந்துவிட நிகழ்காலம் கேள்விக்குறியோடு நகர எதிர்காலமோ ஏக்கத் தவிப்போடு சொந்தங்களின் தவிப்பும் தொடர சோகங்கள் மனதை நெருட காயங்கள் வடுவாக காலங்களும் ஓடிவிட நிழலாகத் தொடர்கிறதே நினைவுகளும் காணாமற் போன சொந்தங்களின் தவிப்பாக ! https://www.youtube.com/watch?v=PQb-hxlJd8E