தமிழும் பாரதியும்ரஜனி அன்ரன்“ தமிழும் பாரதியும் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 12.09.2024 தமிழும் பாரதியும் பாரதியும் தமிழும் பிரிக்க முடியாப் பிணைப்புக்கள் தமிழ் தமிழ்ப்புலமை தமிழ்ச் சொல்லின் பெருமை பேசிய கவிஞன் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்து தேசமெல்லாம் தமிழோசையை ஒலிக்கவிட்ட உணர்ச்சிக் கவிஞன் பாரதி ! தமிழன்னையின் தவப்புதல்வனாகி தமிழுக்கு தந்தையென மகுடம் சூடி தித்திக்கும் தேனாகத் தமிழைச் சுவைத்து தெவிட்டாத இன்பத் தமிழைப் பருகி தமிழ் வார்த்தையால் யுத்தம் செய்து தமிழை நேசித்து சுவாசித்த கவிஞன் பாரதி ! தெளிவு கொண்ட பாரதியின் தமிழே தெய்வமகன் பாரதியின் மொழி விடுதலைக் கோடியில் பாடல் எழுதி விடியல்க் கீதத்தை கூவிய குயில் தமிழினத்தின் இருளினை நீக்கிட ஒளி வீசிட வைத்த சூரியன் ! புதிய உலகைத் திறக்க நவீன கவிதைக்கு அடித்தளமிட்டு கவியுலகச் சக்கரவர்த்தியாகி கவியுலகை ஆட்சி செய்த பாரதி புவியுலகையும் வென்றான் கவியாலே பாரதி இல்லையேல் தமிழும் இல்லை பாரதியும் தமிழும் என்றும் நின்று நிலைக்கும் ! https://www.youtube.com/watch?v=5pbFqOGPlbs