◉ 1 பார்வைகள்
DAVID ANTHONY says: 24 November 2026. General Term 34th Week. Tuesday. அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின்…
DAVID ANTHONY says:
24 November 2026.
General Term 34th Week.
Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.இது வரை நாட்கள்சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி……
“எமக்காக மரணித்த விடுதலை போராளிகள் மாதத்தில்”..……..
24 நவம்பர் 2026.
பொதுக்காலம்:34ம் வாரம். செவ்வாய்.
பதிலுரைப் பாடல்:
—————————-
திபா 96:
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
ஆமென்.அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
——————————
அக்காலத்தில் இயேசு
அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ‘´நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்‘
என்றார்.
(புனித லூக்:21:10,11)
சிந்தனை துளிகள்:
——————————
« தேவாலயம் »
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
யெருசலேம் « தேவாலயம் »இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மையமாக இருந்தது. இயேசுவின் இறைவாக்கு அவரின் உயிர்ப்பிற்கு பிறகு வரலாற்றில் நிறைவேறியது. கி.பி. 70 ம் ஆண்டில், உரோமைப்படைகள் யெருசலேமிற்குள் நுழைந்தன. கற்கள் மேல் கற்கள் இராதபடி, அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான பேர் நாடு கடத்தப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. நமது உள்ளம் இறைவன் வாழும் இல்லம். அங்கே இரக்கம், அன்பு, மன்னிப்பு சுரக்க வேண்டும். அப்போதுதான், கடவுள் அங்கே இருப்பார்.
ஆகவே,இறைவா,
உமக்கே புகழ்!
உமக்கேமாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.(பிரான்ஸ்)




உறவுகளின் கருத்துக்கள்
அதிபர் நடாமோகனின் இன்றைய தகவல்
துலாவி உலா வாருங்கள்.
முதலில் உங்களை பதிவு செய்து கொண்டு தொடருங்கள்..!
தயவுசெய்து செய்திகளை இங்கே பதிவிட வேண்டாம்.