அன்னைக்கு நிகருண்டோ அவனியில்அன்னைக்கு நிகருண்டோ அவனியில்அன்னைக்கு நிகருண்டோ அவனியில். அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம் ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம் உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள் உயர வைத்தாள். இருள் வந்து சூழும் போது நிலவாய் நின்றாள் எமை வளர்த்து மரமாக்க வேராய்ச் சென்றாள் உறக்கமின்றி எம்மவர்க்கு உயர்வைத் தந்தாள் உழைத்துழைத்து- உலகத்தில் ஓடாய்த் தேய்ந்தாள் தனைமறந்து எமக்காக வாழ்ந்த தாயை-அவள் தந்த உயிர் பிரியுமட்டும் நிறுத்தி வாழ்வோம். அம்மாதான் நேரில் கண்ட அன்புத்தெய்வம் அதைவிடவும் ஆலயங்கள் தேவையுண்டோ.. -பசுவூர்க்கோபி- நெதர்லாந்து.