அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே.......ரஜனி அன்ரன்அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே..கவி...ரஜனி அன்ரன் (B.A) 09.05.2024 உயிர்தந்த தாயும் உலகைக் காட்டிய தந்தையும் என் வாழ்வின் பொக்கிசங்கள் நிஜ உலகின் தெய்வங்கள் நித்திலத்தின் முத்துக்கள் பெரு வரமாய் கிடைத்த மகுடங்கள் நிகரென்று சொல்வதற்கு எதுவுமில்லை அவனியிலே ! தன்னம்பிக்கையின் பெரு விருட்சமாக தன்னலமற்ற தியாகியாக அர்ப்பணிப்பின் தேவதையாக படைப்பின் சக்தியாக அவளே அரசாட்சி இமயமாய் நாம் உயர - தன்னை உபயம் செய்தவள் அன்னையே அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லையே ! தொப்பூழ்க் கொடியில் நேசத்தைக் காட்டி மழலைப் பருவமதில் மடியினில் சுமந்து பள்ளிக் காலமதில் பற்பல கருமங்களாற்றி பருவ வயதினில் பெருமிதம் கொண்டு கடைசி வரைக்கும் நெஞ்சினில் சுமந்த அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லை அவனியில் அன்னை ஓர் அதிசயமே ! https://www.youtube.com/watch?v=XxFZ-xjn8yQ