இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….இரா.விஜயகௌரிஅன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம் காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும் தலை கோதி வருடி எழும் நேசமிகு அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில் எழுதாத. வேதம் அவள் - வாழ்வை எழுதி வகுத்தெழுதும் -ஞானமும் அவளே அட்சய பாத்திரமாய் நிறைந்தருளும் அசராத அவள் பேரன்பின். பெரும் படைப்பு திட்டமிட்டெழுதி வரும் நூலிழையின் பின்னல் தெளிவாக மனதெழெதும்உறவில் கரைந்தசையும் அவள் தொடுப்பு-நம்மை வழுவாது வார்த்தெழுதும் வார்ப்பில் சிதையாது சீர்தூக்கி சிறப்பாக்பி தினம் செம்மையுறு வாழ்வாக்க வளமாக்க தனையுருக்கி தளராது. விரைந்தெழுதும் அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும் நிகருண்டோ அவனி தனில்………..