தியாகமே தீர்ப்பானதாஇரா.விஜயகௌரிதியாகமே தீர்ப்பானதா ஊரெழு மண் உதித்து உயிர்ப்புடன் தமிழ் விதைத்து ஊனுடல் தம்மைத்தாமும் விருப்புடன் எழுதி. வைத்தான் பசிக்கொரு. விடை. கொடுத்து பெரும் பசி கொண்டெழுந்த அன்பினில் விளைந்த முத்து-அவன் அகிலத்துள் அகிம்சை சொன்னான் தியாகத்தின் ஆழிமுத்து-அவன் தமிழினத்தின் வரத்தின் வைரம் நெஞ்சம் நிறைந்ததாம் வீர மைந்தன் அவன் உரைத்தவை உயிர் பெறுமோ பொருள் நிறை அவன் பணி தான் உயிர்த்தெழும் உயிர்ப்பாய் வருமோ தலைமுறை நிலைத்து வெல்ல தரும் ஒரு உணர்வாய் தொடர்வோ