இரா.விஜயகௌரிஇரா.விஜயகௌரிவித்தகத்தை உரைக்காது சத்தியத்தை உரைத்தெழுந்தேன்…… மொழிக்குள் விழுதாகி மொழியமிழ்துள் இழையாகி வேரின். கணுக்களுக்குள் உறிஞ்சி எழும் மொழியாகி ஆற்றின் ஒழுக்காகி -நிதம் அழகு தமிழ் சொல்லாகி சத்தியத்தின் பாய்ச்சலிலே சரித்திரத்தின் வடம் பிடித்தேன் எனக்குள் ஒளியானாள் என் விழுதின் மொழியானாள் அவள் உணர்வின் உறவாகி-நிதம் உதிரத்தின் பின்னலிட்டாள் தெறிக்கும் கதிராகி -அவள் தெவிட்டாத அமிழ்தாகி விளக்கும் சொல்லாகி-வாழ்வு ஒளிக்கதிரில் மின்னலிட்டாள் செழிக்கும் பயிரினுள்ளே -அவள் வேத்த்தின். பொருளானாள் ஆழ்கடலின் முத்தாகி-உறவு கடலுக்குள் நங்கூரமிட்டாள் தேவதையாய் வருடுகிறாள்-அவள் சத்தியத்தை உரைத்தெழுந்தாள்