எங்கே நிம்மதிசிவரூபன் சர்வேஸ்வரிஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று தேடிப்பார்க்கும் காலம் // அங்கே இங்கேயென அலைபாயும் நினைவுகள் // தூங்காமல் விழித்திருந்து வளர்த்த அன்னையோ // அனாதை முகாமில் நிம்மதியைத் தொலைத்து // சொத்துக்காக சொந்தங்களைப் பகைத்து தனிமையிலே // வசந்த காலமாக இருந்த உறவுகள் // பணமில்லை என்றே ஒதுக்கியும் வைப்பர் // படித்தும் பண்பின்றி வார்த்தையும் ஆடலே // ஒவ்வொன்றையும் பார்க்கும் இடத்தில் நிம்மதிவருமா // புன்னகை என்னவிலை எனப்பாடிய கவிஞனுக்கு // நிம்மதி என்னவிலை என்றும் தெரியவில்லையே /_ எங்கே தேடுகின்றேன் அதுவும் எட்டியே போகின்றது // சிவருபன் சர்வேஸ்வரி