நிச்சயதார்த்தம்கீத்தா பரமானந்தன்நிச்சயதார்த்தம் உனக்கென நானும் எனக்கென நீயும் ஒன்றாகும் சொந்தம் உருவாக்கும் இன்பம்! மூத்தோர்கள் கூடி முடிவாகும் பந்தம் முகவுரை காணும் திருமணக் கோலம்! இருமனங் கலந்து இதயங்கள் பேசும் இனிமைகள் சூடி உறவென ஆக்கும் தக்கோர் முன்னே தட்டுக்கள் மாறும் பக்கம் இரண்டும் பரிமாறும் பலவும்! மலர்களும் மஞ்சளும் மங்கலம் இசைக்கும் மனதினில் ஆயிரம் கனவுகள் இனிக்கும் வரைமுறை காணும் வனப்புறு நாளாய் வாழ்வினில் என்றும் நிச்சயதார்த்தம்! கீத்தா பரமானந்தன்06-02-2023