வளர்ந்த குழந்தைகள் தாமேக.குமரன்வியாழன் கவி ஆக்கம் 111 வளர்ந்த குழந்தைகள் தாமே! எழுதிடும் கவிகள் வலியினைக் தாங்குமா வரியதின் வழிதனில் மன வலி போக்குமா ? சிறகுகள் ஒடித்திட பறவைகள் பறக்குமா பறந்திட உதவிட வார்த்தைகள் போதுமா ? தாங்கும் இதயங்கள் சார்பதை தேடுமா? வருகின்ற நாட்களில் வழித்துனை தோன்றுமா? புலர்ந்திடும் பொழுதுகள் விடிவதைக் காட்டுமா? கரங்களைக் கூப்பி கடவுளை நாடி நலம் வளம் பெற நம்பிக்கை கொள்வோமா! க.குமரன் யேர்மனி