நோக்கடா மானிடாசிவதர்சனி இராவியாழன் கவிதை 1922! நோக்கடா மானிடா…! நோக்கம் கொண்ட மனிதா நீ நோக்கிட எத்தனை விதமாய் தேக்கிட எண்ணு தினமும் ஆக்கிடும் அதனுள் பலதே.. வாக்கினைத் தருவாரும் உளரே - வல்லவை ஊக்கிட உதவுவாரும் சிலரே ஏக்கமும் மெல்ல விலக்கு ஏந்திட வேண்டுமே உழைப்பு.. பூத்திடும் நொடிகள் விரைவாய் புனைந்திடு கனவினை உன் நனவென யாவும் மாறும் புவனமும் உன்னைப் போற்றும்.. உனக்கென இருப்பது உனது அதைத் திருடிட யாரால் இயலும்?- ஒரு நாள் உனக்கது மெல்லவே புரியும் மானிடா…! சிவதர்சனி இராகவன் 25/1/2024