வீணர்கள் நிலைசிவரூபன் சர்வேஸ்வரிவீணர்கள் நிலை குருவிக்கூட்டுக்கு கல்லெறிந்து பார் குருவிகள் பறந்து விடும் -ஆனால் நீ குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்து பார் குளவிகள் கொட்ட வரும் குணமறிந்து செயலற்ப்பட்டால் -ஒரு குற்றமும் தெரியாது. குறுக்கு வழியில் சாதிப்பேனென்று கொப்பரம் தட்டி நின்றால் தலை குனிந்து போகும் நிலையும் வெகு தூரமில்லை. நல்லவன் போன்று நப்பாசை போட்டு வேடம் கட்டும் சிலர்- இன்று நாடெல்லாம் பரவி நின்று நர்த்தன மாடுகின்றனர். உண்மையாய் வாழ்கின்றோம்- என்று ஓர் முழக்கம் ஊர் வம்பை வேண்டி- அங்கு ஒர் பதட்டம் நல்லவரையும் பந்தாடும் கூட்டம் நமனுக்குமஞ்சோமென ஓட்டம் கல்நெஞ்சுக்காரர் செய்யுமாட்டம் கருணையென்பது இல்லாத தேரோட்டம் பூவையவள் பாரினிலே பூகம்பமாய் நின்றாள் பூம்புகாரா கண்ணகி போன்று வீம்புகள் செய்யும் வீணர் கூட்டத்தை வீர மகளாய்த் தானெழுந்து நீதியையுரைத்தாலும்- வீணர்கள் நிலை........????? கவிஞர் சிவரூபன் சர்வேஸ்வரி.