சிறுமை கண்டு பொங்குவாய்சிவரூபன் சர்வேஸ்வரிசிறுமை கண்டு பொங்குவாய் ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ பழமையை மறந்தனர் பண்பாட்டை இழந்தனர் // பாசத்தைத் துறந்தனர் பணத்தாசை பிடித்தனர் // நேர்மையற்ற உழைப்பு நிதானமற்ற செய்கை // வேலையற்ற திண்டாட்டம் வேதனையும் படுத்துதல் // கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் உருவாகின // வேலிச்சண்டையும் வல்லடி வழக்கும் // கொள்ளியும் வைக்கமாட்டேன் என்சொத்தை தாவென்பதும் // சிறுமைகள் சீறும்பாம்பாய் சிகரம் தொடும் காலமையா // சிறுமையான செயலிலே பெருமைகொள்ளும் உலகம் // சிறுமையைக் கண்டு பொங்கும் நெஞ்சம் // மெளனமாக போகும் காலமும் உருவாகியது // சிவருபன் சர்வேஸ்வரி