அண்றிட்ட தீதங்கராஜாகவி 609 அண்றிட்ட தீ தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியத்திற்கு அண்றிட்ட தீ தெற்கிலங்கையில் இன்று எரிகின்றது நாற்பத்தியொரு ஆண்டுகள் கடந்தாலும் கர்மாவின் வலிமை புரிகின்றது மிகப்பெரிய அறிவியல் பொக்கிஷம் கண்முன்னே எரிந்து சாம்பலானது சுகப்பட்டுக் கொண்டார்கள் புத்தரின் பக்தர்கள் அது அறிவேயற்ற ஜீவராசிகளின் செயலானது தொண்ணூற்றேழாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் சிறப்புமிக்க ஓலைச் சுவடிகள் தன்னிகரில்லா நூலகம் தாங்கிய அறிவுச் சொத்துக்கள் எரிந்து சாம்பலாகிய கொடிய நொடிகள் அறிவழிப்பு செய்வதாக மூடர்களின் வன்முறை அதன் பலனையின்று அனுபவிக்கிறார்கள் அவர் தலைமுறை இனவெறி குண்டர்கள் செயய்திட்டாரன்று துவம்சம் அதற்கு தண்டனையோ நடுவீதியில் இன்றவர் வம்சம் தீதும் நன்றும் பிறர்தர வாரா இதை அறியாத அறிவிலிக் கூட்டம் யாதும் ஊரே யாவரும் கேளிர் அறிந்திருந்தால் நிகழ்ந்திருக்காதன்றோ இனவொழிப்பாட்டம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இப்பொழுதுதான் வந்தது அந்த நிலையும் பெரும் வரலாற்றுத் தவற்றை இழைத்தார்கள் அன்று அதற்கான பயனை அனுபவிக்கிறார்கள் இன்று ஜெயம் 08-06-20022