பசிதங்கராஜாகவி 617 பசி ஒருசான் வயிற்றுக்காய் எத்தனை போராட்டம் ஒருபிடி சோறு ஒருசொட்டுத் தண்ணீரால் வாழ்வோட்டம் பசியால் பட்டினியால் இறந்தவர் இங்கே கோடி பசிதீர்ப்பார் யாரோ வருவாரோ வாழும் பிணங்களைத் தேடி பசித்திருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை வசிப்பவன் அடுக்குமாடியில் அறியவில்லை வறுமை புசிப்பவர் செவிகளிற்கும் கேட்கவில்லை பசித்தவர் மரணக்குரல் அதிசயமான உலகம் செவிடானது இல்லை உதவும் நிகழ்ச்சிநிரல் ஒருவருக்கு உணவில்லையெனில் உலகையே அழிப்பதா இருப்பவர் தாமுணர்ந்து பகிர்ந்து அளிப்பதா ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றானாம் ஆலயம் ஓலைக் குடிசையாய் இருப்பதும் ஏனாம் ஒட்டிய வயிறுடனங்கு மண்ணையுண்ணும் மெலிந்த தேகம் எட்டியும் பார்த்திடாதிங்கு கண்ணைமூடியே தின்னும் தேசம் தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பவன் மனிதன் பேணினால் அன்பை மனிதா நீயே மனிதருள் புனிதன் . ஜெயம் 09-08-2022