பேசாமல் பேசும் உலக மொழிதங்கராஜாகவி 623 பேசாமல் பேசும் உலக மொழி மொழிகளிற்கெல்லாம் மூத்த மொழி மனிதன் பேசிய முதன்மை மொழி வாயும் பேசாது காதும் கேளாது இருந்தும் உணர்வைப் பரிமாறா நாளேது வார்த்தைகள் இல்லாத மௌனமொழி விரல்கள் உற்பத்தியாக்கும் சைகை மொழி வாய்ப்பேச்சில் இல்லா அற்புதம் இதற்குண்டு உலகளவில் கொண்டாடப்படவேண்டிய மொழியொன்று இறைவன் கொடுத்த உன்னதமான வரம் திறமையாய் கற்று உயர்ந்தார் வாழ்க்கைத்தரம் வார்த்தைகளால் வடிக்கமுடியாத அழியாத காவியங்கள் பார்த்தாலே பரவசம்தான் விரல்களின் ஓவியங்கள் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவிய மொழி போற்றிடுவோம் புரட்டாதி இருபத்துமூன்றை உணர்வுகள்வழி இயலவில்லையேயெனும் எண்ணத்தை விரட்டிய மொழி தயக்கத்தைத் தகர்த்து குரலின்றி விரலால் எண்ணத்தைப் பரிமாறும்மொழி ஜெயம் 21-09-2022