திசைகாட்டிகள்ரஜனி அன்ரன்“ திசைகாட்டிகள் “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 03.10.2024 அறிவுக்கடலின் கருவூலங்கள் அர்ப்பணிப்பின் ஆணிவேர்கள் அறநெறி காட்டிய சீலர்கள் தடை நீக்கி வழிகாட்டிய ஆசான்கள் தகமையோடு நாம் வாழ வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டிகள் அவர்கள் இல்லையென்றால் நாம் யாரு ! அறிவொளி வீசிய அற்புத தீபங்கள் அறிவுக்கடலின் ஒளித் தூண்டல்கள் அறிவுரைகளால் எமை மேம்படுத்தி அருள்தரும் அறிவின் நதிகள் ஆசான்கள் அத்தனை துறையாளர்களையும் செதுக்கும் சிற்பிகள் பொறுமையுடன் வழிகாட்டி வாழ்வின் வெற்றிக்கு ஒளியூட்டிய வாழ்வின் திசைகாட்டிகள் ஆசான்களே ! சவால்களை வெற்றி கொள்ள சந்தேகங்களைத் தீர்த்து வைத்து வலிமையைத் தந்து வல்லமையூட்டி அருவியாய் ஓடிடக் கருவியானவரே விசையாக நாம் செயற்பட திசைகாட்டியான ஆசான்களே அசை போட்டுப் பார்க்கிறேன் உங்கள் பணிக்கு நன்றி ! https://www.youtube.com/watch?v=vXQMFljQA1s