புனிதா கரன் கவி 06புனிதா கரன்பாரதி கண்ட புதுமைப் பெண்ணே// தாரகை உனையே தரணி வியந்திட// வீசும் தென்றலாய் வாசம் வீசியே// பேசும் மொழியில் வீச்சைக் காட்டி// கல்வி கற்று கசடற வாழ// பல்கிப் பெருகுமே பலவகை நன்மையும்// சீராய் நீயும் சிறந்தே விளங்கிட// சோதியாய் நீயும் ஒளிர்ந்திடல் அழகே// அச்சம் விடுத்து அகந்தை யின்றி// அடங்க மறுத்தே அகிம்சை வழியே// தன்னல மற்று தெளிதல் அறமே// முடியா தென்ற முயலாமை விடுத்து// முடியு மென்றே முயல்தல் சிறப்பே// வையம் போற்றி வாகையும் சூடும்// வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கும்// புனிதா கரன்