பூக்கள் பூத்திடும் வசந்தம்ரஜனி அன்ரன்“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024 சித்திரையும் வைகாசியும் செதுக்கி வைத்த சிற்பமாய் பூக்கள் பூத்திடும் வசந்தகாலம் பூவையரும் மகிழ்ந்திடும் புத்துணர்வுக் காலம் சித்தமுடன் கோடைமகளை வரவேற்க வனப்போடும் செழிப்போடும் வாசனையோடு வந்துவிட்டாள் வசந்தமகள் ! கண்ணுக்கு விருந்தாகும் பசுமை கண்கவரும் வசந்தகாலப் பெருமை மனதிற்கு இசைவான மலர்க்கூட்டம் மனதினை மயக்கிடும் வண்ண்க் கோலம் பட்சிகள் இனிய கீதமிசைக்க வட்டமிட்ட சில்வண்டுகளும் சட்டெனவே தேனைக் குடித்து மகிழும் பூக்கள் பூத்திடும் வசந்த காலம் ! கனிதரு மரங்களும் பூத்துக் குலுங்கிட கவினுறு சோலையும் எழிலைக் கூட்டிட மனமெனும் மாளிகையும் மகிழ்வினைத் தந்திட தனமெனவே வந்தாள் வசந்தப் பெண்ணாள் வரமாய் கிடைத்த வசந்தகாலம் வாழ்வின் வண்ணப் பொற்காலமே ! https://www.youtube.com/watch?v=JXtfaxUDI7Q