தடுமாறும் உலகம்பொன்.தர்மாஇல.529 *** தடுமாறும் உலகம்*** ஆங்காங்கே அடித்தெடுக்கும், மடை பாயும் வெள்ளம். கோர வெறி கொண்டு கொளுத்தி டும் பாட்டு வெய்யில். வெறும் கையைக் காட்டிப், புறம் தள்ளும் பேராளர்கள். துரத்தியே பிடித்திடும், தூங்காத நோய்கள். விரட்டியே அடித்தாலும், வேறுருக் கொள்ளும் , வீரியக் கிருமிகள். ஏட்டிக்குப் போட்டியாய், எழுந்திடும் யுத்தங்கள். தூக்கிடும் வாளதனில் , தோய்ந்திடும் இரத்தங்கள். தடுமாறும் உலகம், தடுமாறும் உலகம். பொன்.தர்மா