மறவர்குலத்தின் மாதரசி.....ரஜனி அன்ரன்ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய் மலர்ந்தமலரே மறத்தின்மறுவடிவே பெண்ணும் போர்க்களம் புகுவாளென்று மண்ணில் பொறித்த தீப்பொறிநீயே ! நிமிர்ந்தநடையும் நேர்கொண்ட பார்வையும் விடியலின் ஆயுதமென்று உணர்ந்து வீறுநடைபோட்டு கோப்பாய் மண்ணில் நேருக்கு நேராகமோதி மண்ணிலே சாய்ந்துவிட்ட மண்ணிற்குள் விதையான முதல்மாதரசியே புரட்சியின் விதையாக நீவிழுந்த அக்டோபர் பத்து ஈழப்பெண்கள் எழுச்சி நாளாச்சு ! காந்தழ்ப்பூக்கள் மலரும்முன்னே காற்றினில் கலந்திட்ட முதல்ச்சுடரே பெண்ணினம் அடிமை இல்லையென்று குருதியால் வரலாறு எழுதிச்சென்றாய் மாலதியெனும் வீரப்பெயரே – என்றும் மறவர் படையணியின் தாரகமந்திரமாம் ! https://www.youtube.com/watch?v=cpbs3IIS_mo