மாதவமே உந்தனைராணி சம்பந்தர்28.11.24 ஆக்கம் 340 மாதவமே உந்தனை மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதவமே உந்தனை வணங்கிடுவோம் தேசியத் தலைவர் நற்சிந்தனையில் உதித்து வழி நடத்திய ஆராதனையைப் போற்றிடுவோம் வீட்டுக்கு வீடு பெற்று எடுத்த பிள்ளையில் கற்றுக் கொடுத்த நாட்டுப் பற்றினை பார் போற்ற புகழ்ந்திடுவோம் நாட்டுக்குத் தன் பிறந்த மண்ணிற்கு விடுதலை வேண்டி உழைத்து உயிர் நீத்த மாவீரரே ! காந்தள் மலர் தூவி மாவீரர் புகழ் பாடி ஒளித் தீபமேற்றி நினைந்திடுவோமே வஞ்சனைச் சூழ்ச்சியே நிந்தனை செய்த கொடுமையில் அநியாயமாய்ப் புதைந்தவரே உன் கல்லறை கூட உனக்கு சொந்தம் இல்லையே சொந்த மண்ணில் என வடித்த கண்ணீர், விட்ட இறுதிப் பெருமூச்சும் கொடிய புயல், மழை, இடியுடன் போராடி ஓடுகிறதோ? ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து