தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்ரஜனி அன்ரன்“ தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் “ ...............கவி...ரஜனிஅன்ரன்(B .A) 24.11.2022………… உலகையே விழிக்க வைத்து உரிமைக்காய் வித்தாகிய உன்னதர்களை காலநதியினில் கரைந்துவிட்ட காவியரை மனிதம் நிமிர மண்மானம் காத்தவரை மரணத்தை வென்றிட்ட வீரமறவர்களுக்காய் தலை சாய்த்திடுவோம் என்றும் ! தாயகக் கனவினைத் தாகமாக்கி தார்மீகத்தையே வேதமாக்கி தேகத்தையே கொடையாக்கி தேசவிடியல் ஒன்றையே நாதமாக்கி வேதனைகளைத் தூரமாக்கி வெந்தணழில் ஈகமாகி செந்தணலாகிய வீரமறவர்களுக்காய் தலை சாய்த்திடுவோம் என்றும் ! தியாகத்தை அர்ப்பணித்த தீரர்களை மகாயாகத்தையும் வென்றிட்ட மறவர்களை புதுநானூறு படைத்திட்ட புரட்சிவீரர்களை சாவினை அணைத்திட்ட சரித்திரர்களை சந்ததி வாழத் தம்முயிர் ஈய்ந்தவரை தன்னலமின்றிய தியாகிகளை தலைசாய்த்து வணங்கி நன்றிக்கடன் தீரவே அவர் தலைமுறைக்காய் கரம் கொடுப்போம் ! https://www.youtube.com/watch?v=vW-cX9ZWuSY