பன்னாட்டு இனவழிப்புநாள் தை27ரஜனி அன்ரன்“ பன்னாட்டு இனவழிப்புநாள் தை27 “கவி......ரஜனி அன்ரன்(B.A) 27.01.2022 தைத்திங்கள் இருபத்தி ஏழினை பன்னாட்டு இனவழிப்புத் தினமாக பல்லுலகும் அறியும் வண்ணம் பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும் உலக வரலாற்று ஏடுகளின் கறைபடிந்த அத்தியாயமாக கண்ணீரின் காவியமாக இனஅழிப்புக்கள் அரங்கேறியதே ! ஐரோப்பா தொட்டு அமெரிக்கா வரை சென்று அவுஸ்ரேலியா கனடாவிலும் பரந்து எங்கள் தேசமும் இதற்கு விதிவிலக்கல்லவே இனத்தின் பேராலும் நிறத்தின் பேராலும் உலகையும் உலுக்கியதே இனவழிப்புக்கள் ! கனடாவில் பூர்வீகக்குடிகளும் அமெரிக்காவில் செவ்விந்தியர்களும் அவுஸ்ரேலியாவில் பழங்குடியினரும் மெக்சிக்கோவில் மாயன் இனத்தவரும் ஜேர்மனியில் யூதர்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டனரே எம் தேசத்தின் நேச உறவுகளின் இனவழிப்பும் குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியங்களே சர்வதேசம் மெளனித்திருக்க சர்வநாசமும் அரங்கேறியதே !