கல்லறைவீரர் கனவிதுவோரஜனி அன்ரன்கல்லறைவீரர் கனவிதுவோ.....! கவி....ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023 விடியல் கனவினை விழிகளில் ஏந்தி தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு செங்களமாடி வெஞ்சமர் புரிந்த வீரமறவர்களே உம் கனவும் நினைவும் தாயகக் காதலே ! உரிமையை வெல்ல ஒற்றுமையைப் பலமாக்க உலகே வியந்துநிற்க உயிர்த்தியாகம் செய்த உன்னதரே தியாகத்திலும் தியாகம் அல்லவா உங்கள் தியாகம் தேகத்தை ஈகம் செய்த தேசமறவர்களே கல்லறைத் தொட்டிலில் தூங்கிடும் தூயவரே உங்கள் கனவும் நினைவும் தாயகக் காதலே ! தடைகளைப் பொடியாக்கி உடலை வெடியாக்கி வீரத்தை துணிவாக்கி வேகத்தை வலுவாக்கி தணியாத மண்தாகம் குறையாத தமிழ்மோகம் உரமான உரிமையென உம்கனவுகளோ கோடி கோடி கனவுகளைச் சுமந்தபடி – நீவிரும் குழிகளிலே தூங்குகின்றீர் தவிப்போடு - இன்னமும் ஒட்டுமொத்த எம்மினமும் ஒற்றுமையுமில்லை ஒருமைப்பாடுமில்லை உரிமைகளும் தானுமில்லை உங்கள் இலட்சியக் கனவுகளும் கானல் நீராச்சே ! https://www.youtube.com/watch?v=wgYL5rASMpk