சுனாமிரஜனி அன்ரன்“ சுனாமி “ கவி.....ரஜனி அன்ரன் (B.A) 28.12.2023 பிரளயத்தின் பினாமியே பிரபஞ்சத்தை உலுக்கிய சுனாமியே ஆழிப்பேரலையாகிச் சீறி ஊழித் தாண்டவமாடி அசுரப் பசியினைச் தீர்க்க இலட்ச இலட்சமாய் உயிர்களையும் குடித்து ஏப்பம் விட்ட சுனாமியே நீ ஒரு பினாமியே ! காலாற நடந்த இடங்களைத் தளங்களை காதலர்களின் உறைவிடங்களை கடலோடு கதை பேசியவர்களை கிளிஞ்சல்கள் பொறுக்கிய சிறார்களை கரைவலை இழுத்தவர்களை கட்டுமரங்களை கடலே தஞ்சமென வாழ்ந்தோரையும் வாரிச் சுருட்டிச் சென்ற சுனாமியே நீ ஒரு பினாமியே ! கடலடியில் இருந்து பேரலையாய் பாய்ந்து உயிரினைக் குடித்தாய் உடமைகளைச் சிதைத்தாய் உணர்வினைப் பறித்தாய் ஏப்பமும் விட்டாய் இன்று அமைதியாகி. விட்டாய் இனியும் வந்துவிடாதே இன்னுயிர்களைப் பறித்துவிடாதே ! https://www.youtube.com/watch?v=USu7oNSSgiE