கைக்குள் கையாக கைத்தொலைபேசிரஜனி அன்ரன்“ கைக்குள் கையாக கைத்தொலைபேசி “கவி....ரஜனி அன்ரன்(B.A) 01.02.2024 அலைபேசி யுகமாக அவசரத் தொடர்புச் சாதனமாக அண்டத்தையே கைக்குள் தந்து கண்கவர் வண்ணங்களில் காத்திரமான நுட்பத்தில் கைக்குள் கையாக கையடக்கமாக கைக்குள் தவளும் கைபேசியே தொழில் நுட்பத்தின் அபாரம் நீ ! இளசுகள் பலருக்கும் உன்னில் மோகம் இணையில்லை எதுவும் உனக்கு சிறுசுகள் கைகளில் விளையாட்டுப் பொருளாக பெருசுகள் பலருக்கும் அரட்டையரங்கமாக மக்கள் கைகளுக்குள் நீ அடக்கம் உனக்குள்ளே மக்கள் அடைக்கலம் ! பாதைக்கு வழிகாட்டி நீ பயணத்திற்கு உறுதுணை நீ தனிமைக்கும் துணை நீ தேடலுக்குக் கலைக்களஞ்சியம் நீ தொடர்பிற்குப் பாலம் நீ கையிலே தவளும் கைபேசியே அறிவின் கலங்கரை விளக்கே அத்தனையும் நீதான் அற்புதமும் நீதான் ! https://www.youtube.com/watch?v=Nc3_xvaJdQg