தமிழின் மகிமைரஜனி அன்ரன்“ தமிழின் மகிமை “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 22.02.2024 மூவாயிரம் ஆண்டுகள் முற்பட்ட தொன்மை மொழிக்கென முச்சங்கம் அமைத்த பெருமை முத்தமிழையும் வளர்த்துப் போற்றிய தன்மை எல்லைகள் கடந்தும் வாழ்ந்த மகிமை எல்லையில்லாப் பெருமையினைக் கொண்ட விந்தை என்றும் எம் தமிழ்மொழிக்கே உரித்தானதே ! வாழ்வியலுக்கு வண்ண இலக்கியம் தந்து நெடிய வரலாற்றை வரலாற்றுப் பதிவாக்கி மொழிகளின் தாயாகி வனப்பு மிக்க மொழியாகி மொழியின் வளமை பெற்ற மொழி எம் தமிழ்மொழியே ! செம்மொழியென்ற சிறப்பினைப் பெற்று செந்தமிழ் பைந்தமிழ் நறுந்தமிழாகி சிறந்தே பிறந்த சிறப்புமொழி சீரும் அசையும் தளையும் கொண்டு ஒப்பற்ற இலக்கணங்களை ஒப்பியல் ஆய்வுகளை ஒருங்கே கொண்டமொழி எம் தமிழ்மொழியே ! இலக்கியச் செழுமையோடு பழமையாய் இளமைப் பொலிவோடு புதுமையாய் உலகு முழுவதும் பரந்து பெருமையாய் உன்னதமாய் தனித்தே இயங்குது தனித்துவமாய் உணர்வினில் கலந்த எம் தமிழ்மொழியே பழமை புதுமை பெருமையென தமிழுக்கு மகிமையே ! https://www.youtube.com/watch?v=sEbnE-9EsBY