ரஜனி அன்ரன்ரஜனி அன்ரன்விழித்திடு பெண்ணே ! கவி....ரஜனி அன்ரன் (B.A) 07.03.2024 விழித்திடு பெண்ணே விழித்திடு உடைத்திடு தடைகளை உடைத்திடு படைத்திடு சரித்திரம் படைத்திடு புரட்சிப் பெண்கள் வாழ்ந்த பூமியிது புரட்டிப் போட்டுவிடு கயவர்களை புதுயுகம் படைத்துவிடு விழிப்போடு ! பதுமையென்றும் பாவையென்றும் பவ்வியமாய் அழைத்து உன்னை பாசாங்கும் செய்திடுவார் மாயவலையில் சிக்காது தூயவழியில் பயணித்து தூர விலத்திவிடு துஸ்டர்களை ! பேதையரே நிஜக்கண்களை ஒருகணம் திறந்து பாரும் காமுகர்களால் கயவர்களால் கசங்கி மடிந்தவர் எத்தனை பேர்? விடியும் பொழுதுகள் உன்னாலே நொடியும் நீ தயங்காதே பெண்ணே முடியும் என்று போராடு முனைப்போடு செயற்படு விழித்திடு பெண்ணே எப்போதும் விழிப்போடு இருந்திடு ! https://www.youtube.com/watch?v=MhfwhlOwjig