உலகாளும் நட்பேராணி சம்பந்தர்28.07.22 உலகாளும் நட்பே ஆக்கம்-236 இன்ப துன்பமிடையே உருட்டு பிரட்டன்றி பொய் இன்றி உண்மையுடன் இருவர் உள்ளமதில் உருவாகுவதே அன்பு எனும் நட்பு உலகம் முழுவதிலும் யார் எவரிலும் மனதில் உண்டாகி மகிழ்வை உண்டாக்குமிது உலகாளும் நட்பு தொலைவில் இருந்தாலும் தொலைந்து விடாது தொய்வின்றித் தொடரும் நேசிப்பு சிறு துன்பமெனிலும் பெரிதாய்த் துடித்து எதிலும் விட்டுக் கொடுக்கும் உயிர்த் துடிப்பு உலகாளும் நட்பாகும்