கொண்டாட்டக் கோலங்கள்ராணி சம்பந்தர்20.01.2022 கவி ஆக்கம் 191 கொண்டாட்டக் கோலங்கள் கொண்டாட்டமோ பலருக்கு திண்டாட்டமோ சிலருக்கு கொண்டாட்டக் கோலம் துன்பப்பட்டவருக்கு புண்பட்ட நெஞ்சமானதே கண்ட கண்ட பலகாரத்தைச் சுட்டு வேண்டாதவர்க்கு அழைப்பை விடுத்து தடிகொடுத்து அடிவாங்கும் கூத்தாடியே! மதுபானப்புட்டியும்,மாதுக்குட்டியும், போதை வஸ்தும் போதாக்குறைக்கு அளவு மீறி வீணாப் போகும் உணவுப் பட்டியலும் வயிறு நிறைய வந்தவரை"நீ யாரெனக்" கேட்டிடவே உண்ண உணவின்றி இருக்க வீடின்றி படுக்க பாயின்றி அலைந்தவனுக்குப் பஞ்சு மெத்தை கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா? சொல்லணாத் துயரம் சோகமாகும் குடும்பமதில் அல்லும் பகலும் தீராத வலிகளே திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபமதில் இளையவரும் இவ் வண்டியில் ஏறிடுவாரோ?