விடுமுறை வந்தாலேராணி சம்பந்தர்20.07.23 கவி இலக்கம்-278 விடுமுறை வந்தாலே விடுமுறை வந்தாலே வீட்டுக்கு வீடு குதூகலக் கொண்டாட்டம் அன்றாடம் வேலை செய்து செய்து உழைத்த களைப்பில் சோர்வாட்டம் ஓய்வு எடுப்போமென்றாலும் சிலருக்கு ஏக்கமுடன் திண்டாட்டம் பிள்ளைகளிற்கோ விடுமுறைத் தெரிவு சந்தோஷக் களிப்பாட்டம் தந்தைக்கோ முழுசாட்டம் தன் அப்பா கண் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் கேட்டது தவிப்பாட்டம் விடுமுறைக்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு விரைந்து செல்கிறது இன்னோர் வேலை தேடி மரத்துப் போன கால்கள் எட்டி எட்டி நடக்கிறதே உயிரைக் கையில் பிடித்தபடி மனப் போராட்டமுடன் .