கடந்து வந்த பாதையில்ராணி சம்பந்தர்21.12.23 கவி இலக்கம் -296 கடந்து வந்த பாதையில் கடந்து வந்த பாதையில் தொடர்ந்து தந்த அன்பில் படர்ந்த சொந்தமின்றிய பந்தம் தந்த பிணைப்பு பெற்றெடுத்த பிள்ளையாய் ஊற்றெடுத்த அகதி மண்ணில் எமை உப்பு மூடை சுமந்த ஜேர்மன் பெற்றோர் பூரிப்பு செய்த உதவியோ உச்சம் எழுதவே முடியாத மிச்சம் முழுதாகத் தாயகப் பிரிவு மறக்க உபசரித்த உள்ளம் இரண்டும் இவ் உலகை விட்டுப் பிரிந்ததே எமை வாட்டி வதைக்கும் மறக்க முடியாத தாங்கொணாத் துயரமே .