பொங்கும் உளமேராணி சம்பந்தர்18.01.24 கவி இலக்கம் -299 பொங்கும் உளமே தங்கும் தையே இன்ப வெள்ளம் பொங்கிப் பொங்க என்றுந் தங்கும் இனிய தைப் பொங்கல் எங்கெங்கெல்லாம் வாழும் தமிழரில் அங்கெங்கல்லாம் பங்கிடும் கனிவான பொங்கல் அதிகாலை எழுந்து ஸ்நானம் செய்து மாவால் கோலமிட்டு மாவிலைத் தோரணமிட்டு பானையில் மஞ்சளிலை சுற்றி பானையிலிட்ட பால் கொதித்துப் பொங்க பச்சை அரிசி ,சர்க்கரை போட்ட இனிப்புப் பொங்கல் விவசாயி விளைச்சலிட , பரந்த சூரியக் கதிர் விரிந்து ஒளியிட பாரினில் பொங்கும் உளமே! தங்கும் தையே தாங்கும் காலநிலைச் சீற்றம் தணிந்திடு .