விடியாத இரவொன்றுராணி சம்பந்தர்14.03.24 கவி இலக்கம்-307 விடியாத இரவொன்று அடியாத மாடு படியாதென்றும் முடிவிலா அரசியல் மாறாதென்றும் துடிதுடித்து மரணிக்கும் மாந்தர் கூழும் கஞ்சியும் குடிப்பினும் வாழும் பொழுது நிம்மதி குடித்துக் குடித்து மது, போதை அடிமையாகும் சமுதாயம் பள்ளி மாணவர் சீரழிய படித்துப் பட்டமானவர் வேலையின்றிப் பிழிய பிடிக்கும் நோயுடன் வெடிக்கும் வெட்டுக் குத்து எப்போ சுதந்திரமென ஏங்கும் காலைப் பொழுதில் மங்கும் மாலைப் பொழுது யாரைக் கடிந்து கொள்வது வேரிலே விஷம் போரிலே மாண்ட வேதனைக் கண்ணீர் மிதக்கும் சோதனையில் என்றும் விடியாத இரவொன்று .