வண்ண நிலவே வருவாயேசிவரூபன் சர்வேஸ்வரிவண்ண நிலவே வருவாயே இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்// கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே// நிலவே நீயும் நீங்காத காவியமே// புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே// துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்// பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்// வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே// பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே// வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்// வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் // மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்// மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்// கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ // விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்// சிவருபன் சர்வேஸ்வரி