வலியதோ முதுமைதங்கராஜாகவி 717 வலியதோ முதுமை இளமை விடைபெற முதுமை குடியேற முறுக்கேறிய தேகம் சுருங்கியே உறுதிகுலைய துள்ளிய கால்களும் மெல்லவே அசையும் சிறுமை சீண்டிவிடும் முதுமை கொடுமையே சொந்தம் சுற்றியிருந்தும் நொந்த வாழ்வு நேசமும் பாசமும் உடம்பில் தெம்பிருக்கும்போதே அவரவர்களுக்கு அவரவர் வேலை முக்கியம் கையாலாகாத அவலம் முதுமையின் சாபக்கேடே உயிர் மீதான ஆசை யாருக்குத்தானில்லை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவரும் மரணம் முதுமையில் துணையில்லாமல் தனிமை தண்டனையே புதிது புதிதாய் முளைத்துவிடும் வலியதுவே இனிமையை அழித்தே முதுமை விளையுமே விடை கொடுத்திடும் பருவம் அடையுமே மருந்தே உணவாக உணவே வெறுப்பாகுமே கம்பீரம் உருக்குலைய கைத்தடி துணையாகுமே காலனுக்காக காத்திருக்கும் முதுமையெனும் நிலைமை முடக்கிப்போட்டே அறைக்குள் சிறைப்படுத்தும் தனிமை சுருங்கும் உலகுக்குள் உணர்வுகள் ஒடுக்கப்படும் பிரயோசனமற்ற பொருளாகும் முதுமை சாபமே ஜெயம் 28-03-2024 https://youtu.be/AA1718EncYA?si=bUDxydjhfYSNXbEu