அபிராமி கவிதாசன்.அபிராமி கவிதாசன்03.05.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -173 / பசுத்தோல் போர்த்திய பதுங்குபுலி கூட்டமல்ல விசுவாச தொழிலாளி வினோத படைப்பினம் / ஓட்டமும் நடையுமாய் ஓயாது உழைத்திடும் ஆட்டம் பாட்டம் ஆடம்பர வர்க்கமல்ல / உழைப்பின் ஊதியம் உளமாற பெற்றதில்லை பிழைப்பு தேடியே பிள்ளைப்பசி் போக்கிடுவர் / செய்யும் தொழிலை சென்மமும் மறவாது மெய்வருத்தும் வியர்வைத்துளி மண்தொட்டு மணக்கும் / உழைப்பாளி உள்ளவரை உயிர்கள் உய்த்தெழும் அழைத்திட அருகிருக்கும் அன்புள்ள தொழிலாளி / ஆண்டவனே உலகின் ஆதி முதலாளி ஆண்டிட பிறந்த ஆத்மாக்கள் தொழிலாளி / நன்றி 🙏🙏🙏