எதிர்கால உலகம்எதிர்கால உலகம்26.09.24 ஆக்கம் 331 எதிர்கால உலகம் சதிராட்ட அக்கிரமங்கள் பதிவிட்ட பழக்கங்கள் பயிரிட்டுக் குளிர் காய்ந்த அரசியல்வாதி ஆட்டங்கள் பரகசியக் கூண்டில் அடைப்பு புதிரிட்ட சவால்கள் வித்திட்ட வாக்காளர் கடந்திட்ட காலமதில் கண் துடைப்பு சத்துணவே இல்லை பத்துமாத சிசு பால் இன்றிப் பரிதவிப்பு பச்சிளம் பாலர் நீர் அருந்திப் பசி பட்டினித் துடிப்பில் தவிப்பு நச்சுப் போதை மருந்து, மதுவும்,ஊசியும் முழு மூச்சாய்க் குவிப்பு முடங்கிப் போன கனவு மடங்கிய நினைவுகள் அடங்கி ஒடுங்கிடாது சிறகு விரித்துப் பறக்க எதிர்கால உலகம் வெளிச்சமுடன் கண் திறக்கிறதே