உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எல்லாளன்

எல்லாளன்

“தலையீடு” சந்தம் சிந்தும் சந்திப்பு 230 பிரிய உறவொன்று பிரிந்தது ஏன் என்று புரியா நிலை கொண்டு புதிரில் என் நெஞ்சு. ஆரம்பம் முதலாக அன்பு மிக ஆழம். பேரன்பு கொண்டு பிரிய மனையாளும். மன குறைகள் இன்றி மகிழ்வோடு வாழுதற்கு பரஸ்பரம் உதவிகள் பரிமாறல் வழக்கம். ஊரில் இருந்தாலும் ஓயாமல் உரையாடல் நீளும் தொடர்புவழி நித்தம் .ஏன் நிசப்தம்? காலம் சில செல்ல காரணத்தை அறிந்தேன். கூறும் அறிவுரைகள் கூடுவதும் உறவுக்குள் வீணான தலையீடாய் வெறுப்பேற்றும் .அளவாக பேணாது போயின் பிசகாகும்.உணர்ந்தேன் தாய் பிள்ளை என்றாலும் தலையீட்டை விரும்பாது. தாம் தாம் தம் வழியில், தலை யீடு பெரும் பழியில். -எல்லாளன்-

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to