கண்டுபிடியுங்கள்தங்கராஜாகவி 726 நிம்மதி கெடுக்கும் ஜென்மங்கள் விரும்பி யாரும் அழைப்பதுமில்லை அழையா விருந்தாளியாக உள்நுழைவார் வந்தவர் போவாரென்றால் போகமாட்டார் போனவர் வராரென்றால் பிறகும் வருவார் யாவரும் வெறுக்கும் படைப்பு கரைச்சல் தருகின்ற ஜென்மம் பலருக்கு சிறுசிறு தொல்லைகள் சிலருக்கு எல்லைகளில்லாத் தொல்லைகள் நிம்மதியை குலைக்க என வரிந்துகட்டி தனக்காக பிறர் நேரத்தை செலவழிக்கவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டே வெளியேறும் பிறப்பு இந்த அதிதியை அனுப்பிவைத்தாலே மகிழ்ச்சி யார்தான் எவரென்று யோசிக்கின்றீர்களா உங்களுக்கும் தெரியும் நன்றாக நம்புவீர்களா எமபாதக செயல்களை கூடவிருந்து செய்யும் அடுக்கடுக்கான துரோகங்களை எப்படித்தான் சொல்வது எதிர்க்கக்கூடிய வலுமட்டும் இருந்திருந்தால் பகைவர்களை ஓடவோட விரட்டிடலாம் சக்தியில்லா தன்மையதால் அடிமையாக கைகட்டி பயப்படுத்தும் இந்த பங்காளி பகையாளி சுகத்தை சுமையாக்கிவிடும் நிகழ்ச்சி இன்பத்தை குலைத்துவிடும் சம்பவம் தீவிரவாதியாக பயங்கரவாதியாக உள்நுழைந்து அட்டகாசம் ஒழித்துக்கட்ட பலவித ஆயுதங்களை எடுத்திடினும் சாகாவரம்பெற்ற மார்க்கண்டேயனாய் இருந்துதரும் தொல்லைகளே யாருக்கும் இந்தப்படைப்பு நன்மைசெய்ததாக சரித்திரமில்லை ஊருலகம் வெறுத்தொதுக்கும் கேவலங்கெட்ட கூட்டமிது பெரியவர்களென்றும் சிறியவர்களென்றும் தாக்குகின்ற காட்டுமிராண்டிகள் இரக்கமற்ற அரக்க குணங்கொண்ட பூவுலகவாசிகள் ஜெயம் 22-05-2024