உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கீத்தா பரமானந்தன்

கீத்தா பரமானந்தன்

வசந்தத்தில் ஓர்நாள்! தென்றலும் வீசிடும் தெம்மாங்கு கேட்டிடும் எங்குமே பசுமை எழில் விரித்தாடப் பொங்கியே இன்பம் பூமியை அணைக்கும்! சிட்டுக்கள் பாட்டில் சிரித்திடும் சோலைகள் பட்டிதழ் விரித்திடும் பலவித மலர்கள்! சுற்றியே வண்டுகள் சுகந்தத்தைக் காவும்! மொத்தமாய் அழகின் மோகனம் கண்டே சித்தத்தில் இன்பம் சிறகினை விரிக்கும்! இத்தனை அழகின் இனிமையைச் சொல்ல இழைந்தன விரல்கள் இசைந்தன கவியாய்! வசந்தத்தில் ஓர்நாள் வாஞ்சையாய்ச் சுற்றிய வனப்பான பொழுதின் இனிப்பான நினைவில் இனிப்பான வரியுடன்! கீத்த்கா - பரமானந்தன்09-01-24

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to