உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில் கவிதையிலாத் தினமுண்டோ? கவிதையோடு விழித்திடுவேன் கவிதையோடு உறங்கிடுவேன் கவிதையே வாழ்வாகவே கண்டிட்ட கவிஞனெங்கள் காவியத் தலைவனென்போம் கவிதைக்கோர் பாரதியே ! கவித்துவத்தை தன்னகத்தில் கணக்காகக் விதைத்திட்டவன் கவியாக்கிக் களித்திட்டோன் கவியரசர் கண்ணதாசன் காசினியில் ஓர்தினமின்று கவிதைக்கு கொடுத்திட்டார் கவிதைகளாய் சிந்திக்கும் கவியலைகள் ஆர்ப்பரிக்கும் கவிதையாக தாய்த்தமிழதுவே கவிதையில் தவழ்ந்திடும் கவிதையில் மலர்ந்திடும் கவிதையாகவே சுரந்திடும் கவிதைகள் கனத்திடும் கவிதைகளாய்ப் பொழிந்திடும் கவிதைகளே தினந்தினம் களிப்புடனே கவிந்திடும் உலகத்தோர் அனைவரும் உணர்வோடு கொண்டாடும் உலகக் கவிதைத்தினமதில் உதிர்க்கின்றேன் வாழ்த்துகளை சக்தி சக்திதாசன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to