உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாதனை விருது

சாதனை விருது

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-41 07-11-2024 சாதனை விருது பாமுகம் எனும் தளத்தினிலே பல முகத்தை இணைத்ததிலே தாய் மொழியை தக்க வைக்க தன்னால் இயன்றதை நாட்டி வந்தார். நட்டமரம் பல கிளைவிட்டன நாட்டமற்றவை அறியாமையே விட்ட இடத்தில் எமை செதுக்கி வீரியம் தந்த ஆசானே! உயரிய பண்பு துணைவிக்கும் இங்கே ஊக்கம் கொடுப்பது இவரது நோக்கமும் புலர்பெயர் நாட்டில் தமிழ்பேச்சு சாதனை புரிந்தது சாதனைக்கு மேலிங்கு தாங்கள். கனவுகள் யாவும் கல்வெட்டாகி காண வேண்டும் சரித்திரம் இங்கே உயரிய உங்கள் நோக்கமிங்கே உலகிற்கு தெரியட்டும் அருமை என்று! உண்மையை உரைத்து வாழ்த்துகின்றோம் உங்கள் பாமுகத்தில் எம்முகமும் என்று உயர உயர வாழ்த்துகின்றோம் வாழிய வாழிய வாழியவே.. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to